காலைத் தியானம் – ஜூன் 11, 2022

லூக்கா 1: 26 – 38    

இதோ நான் ஆண்டவருக்கு அடிமை    

                      காபிரியேல் தூதன் மரியாளிடம் வந்து இயேசுவின் பிறப்பைக் குறித்து அறிவித்ததை வாசித்தோம். திருமணமாகாத ஒரு பெண் ஒரு பிள்ளையைப் பெற்றால் எப்படிப்பட்ட கஷ்டங்களையெல்லாம் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மரியாள் நன்றாக அறிந்திருந்தாள். ஆனாலும் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று காபிரியேல் தூதன் சொன்னதை அவள் முற்றிலும் விசுவாசித்தாள். தன்னை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தாள். நம் ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அது நன்மையானதாகத்தான் இருக்கும். அது நிறைவேற வேண்டுமானால் கர்த்தருடைய சித்தத்திற்கு நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, முற்றிலுமாக என்னை உமக்கு அர்ப்பணிக்கிறேன். வழிநடத்தும். ஆமென்.