காலைத் தியானம் – ஜூன் 12, 2022

லூக்கா 1: 39 – 56    

வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்    

                      மரியாளின் கீதம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த ஒரு அருமையான பாடல். நம் ஆண்டவர் வல்லமையுடையவர். ஆண்டவருடைய வல்லமைக்கு உட்படாதது ஒன்றுமே இல்லை. இந்த விசுவாசம் நமக்கு இருந்தால் நாமும் நம் வாழ்க்கையில் மகத்தான, மகிமையான காரியங்களைக் காணலாம். உனக்கு அந்த விசுவாசம் இருக்கிறதா? வேதாகமத்தில் காணப்படும் சரித்திர நிகழ்ச்சிகளில், கர்த்தர் செய்துள்ள மகிமையான காரியங்களில் பத்து நிகழ்ச்சிகளை இப்போது நினைவுபடுத்தி, எழுதி வைத்துக்கொள். அவற்றைக் குறித்து உன் பிள்ளைகளோடு அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களோடு கலந்து பேசு. குடும்பமாக, கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் இதுவரை செய்துள்ள மகிமையான காரியங்கள் ஏதாவது இருக்குமானால், அவற்றையும் நினைத்துப் பார்.  மகிமையான காரியம் என்றால் கர்த்தருடைய மகிமை வெளிப்பட்ட காரியம். உனக்கு இவ்வுலகப் பொருட்கள் (வீடு, வாகனம் போன்றவை) கிடைத்ததைப் பட்டியல் போடாதே.

ஜெபம்:

ஆண்டவரே, இவ்வுலகில் உம்முடைய மகிமை வெளிப்பட என்னையும் உபயோகியும். ஆமென்.