காலைத் தியானம் – ஜூன் 13, 2022

லூக்கா 1: 57 – 66    

அவனுடைய வாய் திறக்கப்பட்டு . . .  தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்  

                      சகரியாவின் வாய் திறக்கப்பட்டவுடன் அவன் தேவனை ஸ்தோத்திரித்தான். பல மாதங்கள் ஊமையாக இருப்பது எளிதான காரியமல்ல. இருந்தாலும் மறுபடியும் பேச முடிந்தவுடன், ஒரு சிறிய தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று அவன் ஆண்டவரைக் கேள்வி கேட்கவில்லை. உன் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் எப்படிப்பட்டவை? தேவனுடைய அன்பையும் அவருடைய மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லும் வார்த்தைகள் எத்தனை? எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் வெளிவரும் அநாவசியமான வார்த்தைகள் எத்தனை? உன் நண்பர்களோடு நீ இருக்கும்போது உன் பேச்சு எப்படிப்பட்டதாக இருக்கிறது? டேவிட் ஒகில்வி (David Ogilvy) என்பவர், தன்னுடைய விளம்பரக் கம்பனியில் வேலை செய்கிறவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தார். ஒருவன் தன் மனைவியோடும் பிள்ளைகளோடும் சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியாத விளம்பரத்தை உருவாக்க வேண்டாம் என்பதுதான் அந்த கட்டுப்பாடு. நமக்கும் அதைப் போன்ற ஒரு கட்டுப்பாடு வேண்டும். ஆண்டவருடைய முன்னிலையில் பேச இயலாத வார்த்தைகள் நம் வாயிலிருந்து புறப்பட்டக் கூடாது.

ஜெபம்:

ஆண்டவரே, என் வாயின் வார்த்தைகள் எப்பொழுதும் உமக்குப் பிரியமானவைகளாக இருக்கட்டும். ஆமென்.