லூக்கா 1: 67 – 80
அவருக்கு முன்னாக நடந்துபோவாய்
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்னாகச் சென்று அவருக்குப் பாதைகளை ஆயத்தப்படுத்தும் வேலை யோவானுக்குக் கொடுக்கப்பட்டது. யோவான் எவ்வளவு பெரிய பாக்கியம் பெற்றவன்! நன்றாக யோசித்துப் பார்த்தால், நமக்கும் அந்த பாக்கியம் உண்டு. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னதாக அவருக்குப் பாதையை ஆயத்தப்படுத்தவேண்டும். உலக மக்கள் அனைவரும் அவரை அறியவேண்டும். அவரையும் பரலோக ராஜ்யத்தையும்பற்றி உலக மக்கள் எல்லாருக்கும் தெரியப்படுத்தும் பாக்கியம் நமக்கும் உண்டு. பரலோக ராஜ்யத்தைக் குறித்து ஒன்றும் அறியாத மக்கள் இன்னும் கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் உண்டு. நீ என்ன செய்கிறாய்?
ஜெபம்:
ஆண்டவரே, உமக்காக வேலை செய்யும் பாக்கியத்தை எனக்கும் கொடுத்ததற்காக நன்றி சுவாமி. ஆமென்.