காலைத் தியானம் – ஜூன் 16, 2022

லூக்கா 2: 8 – 20    

தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான்  

                      கிறிஸ்துவின் பிறப்பை, முதலாவதாக பிரதான ஆசாரியனுக்கோ, வேதபாரகருக்கோ, நியாய சாஸ்திரிகளுக்கோ அல்லது ராஜாவுக்கோ தேவதூதன் அறிவிக்கவில்லை. எளிமையான மேய்ப்பர்களிடம் வந்ததற்குக் காரணம் என்ன? பூலோகத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்கும் பணம், படிப்பு, பதவி போன்றவைகளைக் கர்த்தர் மதிக்கிறதில்லை என்பது ஒரு முக்கிய காரணம். இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு ஏழைகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் உயர்த்தவே வந்தார் என்பது மற்றொரு காரணம். தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல தாழ்மையான மனதுள்ளவர்களையும் உயர்த்துவதுதான் அவருடைய நோக்கம். நீ உன் ஆண்டவரால் உயர்த்தப்படுவதற்கு தகுதியுள்ளவனா(ளா)?

ஜெபம்:

ஆண்டவரே, தாழ்மையுள்ள இருதயம் எப்பொழுதும் என்னில் நிலைத்திருக்கக் கிருபை தாரும். ஆமென்.