காலைத் தியானம் – ஜூன் 17, 2022

லூக்கா 2: 21 – 32    

அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்  

                      நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடியெல்லாம் செய்வதற்காக இயேசுவின் பெற்றோர் அவரை எருசலேம் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் பெற்றோர் தவறாமல் செய்யவேண்டும் என்பது இன்றைய பாடம். உன்னுடைய பிள்ளைகளின் சரீர வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் பலவிதமான முயற்சிகளை எடுக்கிறாய். ஆத்தும வளர்ச்சிக்கு என்ன செய்கிறாய்? என் மகன் நான்கு வயதிலேயே கம்ப்யூட்டரைக் கையாளுகிறான் என்று சொல்வதில் பெருமையடையும் நாம், அவனுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கிறோமா? திங்கட்கிழமை பள்ளியில் அல்லது கல்லூரியில் பரீட்சை என்று சொல்லி, ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்குப் பிள்ளைகளை அழைத்து வராத பெற்றோர் எத்தனை பேர்? உன் பிள்ளைகளின் ஆத்தும வளர்ச்சிக்கு முதலிடம் கொடு.

ஜெபம்:

ஆண்டவரே, என் பிள்ளைகளை உமக்கு விருப்பமான வழிகளில் வளர்க்க வேண்டிய ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.