காலைத் தியானம் – ஜூன் 18, 2022

லூக்கா 2: 33 – 40    

எருசலேமில் மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக் குறித்துப் பேசினான் 

                      இஸ்ரவேலருக்கு, அதாவது யூதர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போன காலம் அது. அசீரிய மன்னர்கள், பாரசீக மன்னர்கள், கிரேக்க மன்னர்கள், ரோம மன்னர்கள் என்று ஒருவர் பின் ஒருவராக வந்து யூதர்களை அடிமைப்படுத்தி வந்தனர். இனிமேல் அவர்களுக்கு மீட்பு இருக்க முடியாது, என்ற நம்பிக்கையற்ற நிலைமை பொதுவாக மக்களிடம் இருந்தபோதிலும், அன்னாள் அவளுடைய 84 ஆம் வயதில் இஸ்ரவேலின் மீட்புக்காகக் காத்திருந்தாள். அவள் தேவாலயத்தையும் தேவ சமூகத்தையும் விட்டு விலகாமலிருந்ததால் அவளுடைய விசுவாசம் குறையவில்லை. நாமும் தேவனுடைய சமூகத்தை விட்டு விலகாமல் இருந்தால், சூழ்நிலை எப்படி இருந்தாலும் நம்முடைய விசுவாசம் அசையாமல் இருக்கும்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் எப்பொழுதும் உம்முடைய சமூகத்தில் நிலைத்திருக்கும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.