காலைத் தியானம் – ஜூன் 19, 2022

லூக்கா 2: 41 – 52    

தேவாலயத்தில் போதகர் நடுவில் 

                      இளைஞனான இயேசு காணப்பட்ட இடம் தேவாலயம். அவர் பேசிக்கொண்டிருந்தது போதகர்களோடு. இதனால் அவர், ஞானத்தின் நிறைவையும், ஆவியின் பெலனையும், தேவனுடைய கிருபையையும், மனிதருடைய தயவையும் பெற்றார். உன் பிள்ளைகள் எப்படிப்பட்ட இடங்களில் காணப்படுகிறார்கள்? எப்படிப்பட்ட நண்பர்களோடு காணப்படுகிறார்கள்? அவர்கள் எப்படிப்பட்ட புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வாசிக்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கு நீ சொல்லும் பதில் உன் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் பிள்ளைகளை நல்லொழுக்கத்தில் வளர்க்க வேண்டிய ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.