காலைத் தியானம் – ஜூன் 20, 2022

லூக்கா 3: 1 – 6

சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும் 

                      யோவான் ஸ்நானனின் காலத்தில், ஒரு ராஜா ஒரு இடத்திற்குப் போகிறார் என்றால் அதற்கு முன்னதாக ராஜாவின் ஆட்கள் ராஜா வருவதை அறிவித்துக் கொண்டே போவார்கள். அது மாத்திரமல்ல, ராஜா செல்ல வேண்டிய சாலைகளையெல்லாம் சரிசெய்து கொண்டே போவார்கள். யோவான் ஸ்நானனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையும் அப்படிப்பட்டதுதான். ஆண்டவராகிய இயேசு வருகிறார். ஆகையால் பாதை சரிசெய்யப்பட வேண்டும். பாதையில் உயர்ந்த மேடுகள் இருந்தால் அவைகள் வெட்டி சமமாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆண்டவர் அந்த பாதையில் நடந்து வருவார். உன் உள்ளத்தில் மேட்டிமையான காரியங்களும், பெருமையான சிந்தனைகளும் இருந்தால் உன் ஆண்டவர் அங்கு வர முடியாது. அவைகள் நீக்கப்படவேண்டும். வெட்டி தாழ்த்தப்பட்ட வேண்டிய மலைகளும் குன்றுகளும் அவைகள்தான்.

ஜெபம்:

ஆண்டவரே, என் உள்ளத்தில் இருந்த மலைகளையும் குன்றுகளையும் அகற்றிவிட்டேன். நீர் உள்ளே வாரும். ஆமென்.