காலைத் தியானம் – ஜூன் 21, 2022

லூக்கா 3: 7 – 14

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

                      வெவ்வேறு தொழில்களைச் செய்கிறவர்கள் யோவானிடத்தில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் யோவான் அவர்களுடைய வெவ்வேறு தொழில்களில் இடறுதல் உண்டாக்கக் கூடியவைகளைச் சுட்டிக் காட்டுகிறார். நீ செய்யும் வேலையில் அல்லது தொழிலில் உன்னைக் கீழே தள்ளக்கூடியவைகள் யாவை? இந்த வேலையில் லஞ்சம் வாங்காமல் இருக்க முடியாது என்று உன் நிலையை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறாயோ? உன் வேலையில் அல்லது தொழிலில் இயேசுவை மகிமைப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார். உனக்குக் குறுக்கே நிற்கும் இடறுதல் உண்டாக்கக்கூடியவைகள் உன்னைக் கீழே தள்ளி விடாதபடி காத்துக் கொள்ளக்கூடியவர் ஒருவர் இருக்கிறார்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் வழுவாத படி என்னை காத்துக்கொள்ளும். ஆமென்.