லூக்கா 3: 15 – 22
கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்
பாவங்களிலிருந்து மனந்திரும்புகிறவர்கள் கோதுமை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு பாவ வழிகளிலிருந்து திரும்பாதவர்கள் பதர். மற்றவர்களுக்குப் பயன்படுவது கோதுமை. பதர், எரிக்கப்படுவதைத் தவிர வேறொன்றுக்கும் பயனற்றது. நீ கோதுமையா அல்லது பதரா? திருமணத்திற்கு அழைப்பைப் பெற்றிருக்கிறாயா அல்லது எல்லாரும் ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்குச் செல்லும் போது நீ மட்டும் மனக்கசப்புடன் வெளியே நிற்பாயா? உன்னை அறியேன், நீ யாரென்று எனக்குத் தெரியாது என்று ஆண்டவர் சொல்லி விடுவாரா அல்லது ஆசீர்வதிக்கப்பட்டவனே, நீ உள்ளே வா என்று அழைப்பாரா?
ஜெபம்:
ஆண்டவரே, உம் வருகைக்கு நான் தயாராக இருக்கிறேன். என்னை உம்மோடு சேர்த்துக் கொள்ளும். ஆமென்.