லூக்கா 4: 1 – 13
நாற்பது நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்
சாத்தான் இயேசுவைக்கூட விட்டு வைக்கவில்லை. தேவனுடைய திட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது குறைந்தபட்சம் வேறு திசையிலாவது திருப்பிவிட வேண்டும் என்பதுதான் அவனுடைய குறிக்கோள். இயேசு சாத்தானுக்கு ஒரு அணு அளவு கூட இடம் கொடுக்கவில்லை. சோதிக்கப்பட்ட இயேசு உனக்குச் சோதனை வரும்போது உன்னைத் தாங்கிக்கொள்ள வல்லவராய் இருக்கிறார். சோதனைகளை வென்ற இயேசு, நீயும் சோதனைகளை ஜெயிக்கும் படி உனக்கு பெலன் தர சித்தமுள்ளவராய் இருக்கிறார். நீ வெற்றி வாழ்க்கை வாழ வேண்டுமானால், முதலாவதாக உனக்குச் சோதனைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் இருக்க வேண்டும். இரண்டாவதாக உன் இரட்சகராகிய இயேசுவின் உதவியை நாடவேண்டும்.
ஜெபம்:
ஆண்டவரே, உம் உதவியில்லாமல் நான் சோதனைகளிலிருந்து தப்பிக்க முடியாது. என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.