காலைத் தியானம் – ஜூன் 25, 2022

லூக்கா 4: 14 – 22

என்னை அபிஷேகம் பண்ணினார் 

                      இயேசு, ஏசாயா 61: 1- 3 வசனங்களில் தன்னைப் பற்றி கூறப்பட்டது நிறைவேறிற்று என்று சொன்னார். தரித்திரர், இருதயம் நொறுங்குண்டவர்கள், சிறைப்பட்டவர்கள், குருடர், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் துன்பங்களைப் போக்கவே இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டார். அவர் பூமியில் ஊழியம் செய்த நாட்களில் அதைத்தான் செய்து வந்தார். இன்றும் தரித்திரர், குருடர், ஒடுக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களுடைய துன்பத்தை நீக்கும் வேலை நம்முடையது. நீ தயாராக இருந்தால், உன்னை அந்த வேலைக்காக அபிஷேகம்பண்ணக் கர்த்தர் சித்தமுள்ளவராய் இருக்கிறார். உன்னை அர்ப்பணிக்க நீ தயாரா?

ஜெபம்:

ஆண்டவரே, என்னை அபிஷேகம்பண்ணி அனுப்பும். நான் உம்முடைய வேலையைச் செய்ய விருப்பமுள்ளவனாய் இருக்கிறேன். ஆமென்.