லூக்கா 4: 23 – 32
அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி
நம்மை சந்தோஷப்படுத்துகிற பிரசங்கமாயிருந்தால் அது நல்ல பிரசங்கம். நம்முடைய தவறுகளைச் சுட்டிக்காட்டும் பிரசங்கமாயிருந்தால் பிரசங்கியார் மீது கோபப்பட்டுவிடுகிறோம். நம்மைச் சிந்திக்க வைக்கும் பிரசங்கங்களைக் கேட்கும்போதுகூட, அவை யாருக்குப் பொருந்தும் என்று மற்றவர்களைப் பற்றி தான் நினைக்கிறோம்! நாத்தான் தீர்க்கதரிசி தாவீது ராஜாவிடம் சென்று அவனுடைய குற்றத்தைச் சுட்டிக் காட்ட ஒரு உவமையைச் சொன்னான். தாவீது ராஜாவோ, அந்த உவமை தன்னைப் பற்றியிருக்கும் என்று நினைக்காமல், அது வேறு யாரையோ பற்றியது என்று எண்ணி அதற்குரிய தண்டனையைக் கூட சொல்லிவிட்டான் (2 சாமுவேல் 12:1 – 6). நாம் பிரசங்கம் கேட்கும் கதையும் அப்படிப்பட்டதுதான். ஆண்டவர் உன்னோடு பேச முயற்சிக்கும்போது அவர் உன்னிடம் என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனி.
ஜெபம்:
ஆண்டவரே, திறந்த மனதுடன் உமது செய்தியைக் கேட்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.