காலைத் தியானம் – ஜூன் 28, 2022

லூக்கா 5: 1 – 11

இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் 

                      இன்றும் இயேசுவின் அழைப்பு வந்துகொண்டேதானிருக்கிறது. உலகம் முழுவதும் அவருக்குச் சொந்தமாகும் வரை, உலகிலுள்ள முழங்கால்கள் யாவும் முடங்கி, நாவுகள் யாவும் இயேசுவைக் கர்த்தர் என்று அறிக்கை பண்ணும் வரை, இயேசுவின் அழைப்பு வந்துகொண்டேதானிருக்கும். நீ அழைக்கப்படும் விதம் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அழைப்பின் நோக்கம் ஒன்றுதான். உலகத்தை இயேசுவுக்கென்று ஆதாயப்படுத்துவதில் உன் பங்கு என்ன? எல்லாவற்றையும் விட்டுவிட்டு உன் ஆண்டவருக்கு முதலிடம் கொடுக்கிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய ஊழியனாக என்னையும் உபயோகியும் ஆமென்.