காலைத் தியானம் – ஜூன் 29, 2022

லூக்கா 5: 12 – 26

இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து   

                      தேவனால் படைக்கப்பட்ட மனிதர்கள்தான் நாம் அனைவரும். ஆனால் மனிதருக்குள் எவ்வளவு வித்தியாசமான சிந்தனைகள் என்பதைக் கவனியுங்கள். ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று சொன்ன குஷ்டரோகியின் விசுவாச சிந்தனை ஒரு பக்கம். திமிர்வாதக்காரனைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு போன நண்பர்களின் நல்லெண்ணம் இன்னொரு பக்கம். இயேசுவை ஏற்றுக்கொண்டதால் தன் வீட்டுக் கூரையைக் கூட பிரிக்க அனுமதி கொடுத்த வீட்டுச் சொந்தக்காரனின் சிந்தனை மற்றொரு பக்கம். இதற்கெல்லாம் மாறாக வேதபாரகர், பரிசேயர் போன்றவர்களின் கோணலான சிந்தனைகள் வேறொரு பக்கம். இயேசுவுக்கு எல்லாருடைய சிந்தனைகளும் தெரியும். விசுவாசிகள் நன்மை பெற்றார்கள். வீண்வாதம் பேசி ஆத்துமாவை இழக்கும் கோணலான சிந்தனையுடையவர்களோ, கடிந்து கொள்ளப்பட்டார்கள். உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் சிந்தனைகளைக் காத்துக்கொள்ளும். ஆமென்.