காலைத் தியானம் – ஜூலை 02, 2022

லூக்கா 6: 12 – 19

இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார் 

                     பன்னிரெண்டு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் நாம் என்ன செய்திருப்போம்? சீடர்களில் “அப்போஸ்தலர்” ஆகும்படி விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருப்போம். பின்பு விண்ணப்பித்தவர்களின் குணாதிசயங்களையும் அவர்களுடைய குறைவு நிறைவுகளையும் அலசி ஆராய்ந்து, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் அவர்களை தேர்ந்தெடுத்திருப்போம். இயேசு கிறிஸ்துவோ இராமுழுவதும் பிதாவை நோக்கி ஜெபித்துக் கொண்டிருந்தார். நாமும் எந்த ஒரு முக்கிய வேலையை ஆரம்பிக்கும் முன்னும் அதிக நேரத்தை தனி ஜெபத்தில் செலவிட கற்றுக்கொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்துவுக்குத் தனி ஜெபம் அவசியமாயிருந்தது என்றால் நமக்கு அது எவ்வளவு அதிக அவசியம் என்பதை யோசித்துப் பார்.

ஜெபம்:

ஆண்டவரே, தனிஜெபத்திற்காக நான் ஒரு நேரத்தை ஒதுக்கி வைக்கவும், அந்நேரத்தில் நான் உம்மோடு வைத்திருக்கும் உறவு பெலப்படவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.