காலைத் தியானம் – ஜூலை 04, 2022

லூக்கா 6: 32 – 40

உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாய் இருப்பீர்கள்  

                     சத்துருக்களின் மீது அன்பு செலுத்த வேண்டும். அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்காமல் கடன் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதினால் ஒருவன் உன்னதமானவரின் பிள்ளையாகிவிட முடியாது. ஆனால் ஒருவன் உன்னதமானவரின் பிள்ளையாக இருந்தால், கண்டிப்பாக இப்படிப்பட்டவைகளைச் செய்யாமல் இருக்கமுடியாது.  உன்னை வெறுக்கிறவர்களை நீ நேசிப்பது, நீ தேவனுடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்தும். சரீரப் பிறப்பின் மூலமாக நாம் நம் பெற்றோருக்குப் பிள்ளைகளானோம். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பாவமன்னிப்பைப் பெறும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகிவிடுகிறோம். தேவனுடைய பிள்ளைகளுக்கு சுயநலம் இருக்க முடியாது. சுயநலம் இருப்பவர்கள் சத்துருக்களை நேசிக்க முடியாது.

ஜெபம்:

ஆண்டவரே, என் செயல்கள், நான் உம்முடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்துவதாக. ஆமென்.