காலைத் தியானம் – ஜூலை 05, 2022

லூக்கா 6: 41 – 49

ஆழமாய்த் தோண்டி கற்பாறையின்மேல் அஸ்திவாரம் போட்டு 

                     இயேசுகிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறவன், கற்பாறையின்மேல் அஸ்திவாரம் போட்டு வீட்டை கட்டுகிற மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். உன் வாழ்க்கை இயேசு என்னும் கன்மலையின் மேல் கட்டப்படவேண்டும். உன் அஸ்திவாரம் இயேசுவில் எவ்வளவு ஆழமாயிருக்கிறதோ, அந்த அளவுக்கு உன் வீடு உறுதியுடையதாய் இருக்கும். பெருவெள்ளமும் புயலும் வந்து மோதினாலும் உன் வாழ்க்கை அசையாமல் உறுதியாய் இருக்கும். உன் வாழ்க்கை இப்பொழுது அமைதியாய் இருப்பதால், இயேசுவாகிய கன்மலையில் அஸ்திவாரம் போட வேண்டியதில்லை என்று நினைக்கக்கூடாது. வாழ்க்கையில் எப்பொழுது கொந்தளிப்பு ஏற்படும் அல்லது பெருவெள்ளம் வந்து மோதும் என்பது நமக்குத் தெரியாது.

ஜெபம்:

ஆண்டவரே, என் வாழ்க்கையில் எப்படிப்பட்ட கொந்தளிப்பு வந்தாலும், புயல் வந்து மோதினாலும், அவை என்னை விழத்தட்டாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.