காலைத் தியானம் – ஜூலை 06, 2022

லூக்கா 7: 1 – 10

ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்

                     இந்த நூற்றுக்கதிபதி வித்தியாசமான, மற்றும் விசேஷமான மனிதன். யூதரல்லாத வேறே இனத்தைச் சேர்ந்த இவன் ரோம ராணுவ அதிகாரியாக இருந்த போதிலும், யூதருக்கு ஒரு ஆலயம் கட்டிக் கொடுத்திருந்தான். அவன் தன் வேலைக்காரனை எவ்வளவு நேசிக்கிறான் என்பதைக் கவனியுங்கள். புறக்கணிக்கப்பட்ட யூத குலத்தில் தோன்றிய இயேசுவைப் பார்த்து, நீர் என் வீட்டிற்குள் வருவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று மிகுந்த மனத்தாழ்மையுடன் அவரை வணங்குகிறான். அவன் இயேசுவிடமிருந்து நன்மை பெற்றான் என்பதில் ஆச்சரியமில்லை. நீயும் இயேசுவிடமிருந்து நன்மைப் பெற வேண்டுமென்று விரும்புகிறாயா? விரும்பினால் உன்னிடம் தேவபக்தியும், மனத்தாழ்மையும், விசுவாசமும், தாழ்ந்த நிலையிலிருப்பவர்கள் மீது கருணையும் உண்டா?

ஜெபம்:

ஆண்டவரே, நூற்றுக்கதிபதியிடம் காணப்பட்ட நற்குணங்கள் அனைத்தும் என்னிலும் காணப்பட உதவிசெய்யும். ஆமென்.