காலைத் தியானம் – ஜூலை 07, 2022

லூக்கா 7: 11 – 20

அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி

                     பூரண மனிதனாய் பூமிக்கு வந்த நம் ஆண்டவருக்கு நம் மனநிலை நன்றாகத் தெரியும். அவர் மன உருக்கமுள்ளவர். உன் அழுகை, மனப்பாரம், உள்ளத்தின் கொந்தளிப்பு ஆகியவைகளைப் பார்த்துக்கொண்டு அவர் சும்மாயிருக்க மாட்டார். அவருக்கு சும்மாயிருக்க முடியாது. உனக்காகவும் மனதுருகுகிறார். அழாதே என்று சொல்வதோடு அவர் நிறுத்தாமல் அழுகைக்குக் காரணமாயிருக்கும் தீமையை அவர் நீக்குவார். உன் கண்ணீரைத் துடைத்து உனக்கு ஆறுதல் தருவார்.

ஜெபம்:

ஆண்டவரே, என் துன்பங்களை நீக்கி, நீர் மட்டுமே தரக்கூடிய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.