காலைத் தியானம் – ஜூலை 08, 2022

லூக்கா 7: 21 – 28

கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்

                     யோவான் இயேசுகிறிஸ்து தான் மேசியா என்பதை உறுதிப்படுத்த விரும்பினான். அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. நமக்குக்கூட சில சமயங்களில் சாத்தான் சந்தேகத்தை உண்டாக்குகிறான். இயேசுகிறிஸ்து உண்மையிலே மேசியாதானா? அவர் இரட்சகர் தானா? என்னை பரிசுத்தம் பண்ணி என்னை உயர்த்தக்கூடிய தேவன்தானா? அப்படிப்பட்ட கேள்விகள் உன் மனதில் வந்தால், நீ கண்டவைகளையும் உன் வாழ்க்கையில் இயேசுகிறிஸ்துவிடமிருந்து பெற்ற நன்மைகளையும் நினைத்துப் பார்.  உன் பெற்றோர், பெற்றோரின் பெற்றோர், அவர்களுக்கும் முன்ன்னுள்ள சந்ததியார் ஆகியோர் பெற்ற நன்மைகள் என்று நீ கேட்டு அறிந்தவைகளையும் நினைத்துப்பார்.  உன் விசுவாசம் உறுதிப்படும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் வாழ்க்கையிலும் என் முற்பிதாக்களின் வாழ்க்கையிலும் நீர் செய்துள்ள எண்ணிலடங்காத நன்மைகளுக்காக உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.