காலைத் தியானம் – ஜூலை 09, 2022

லூக்கா 7: 29 – 39

குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்

                     குறை சொல்லுகிற பிள்ளைகள் தாம் பெற்ற அநேக நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் மறந்துவிடுவார்கள். இந்த பிள்ளைகள் பெற்றோரைக் கூட குறை சொல்பவர்கள். நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறவர்கள். குறை கூறுபவர்கள் நன்றியுள்ள இருதயம் இல்லாதவர்கள். குறை கூறுவது ஒரு வியாதி. அந்த வியாதி உடையவர்கள் யார் எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் தங்கள் மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் இழந்துவிடுவார்கள். நீ அப்படிப்பட்ட வாழ்க்கை வாழாதே! மற்றவர்களின் செயலில் எப்பொழுதும் நன்மையானவைகளைக் கண்டுபிடித்து, அவர்களைப் பாராட்டக் கற்றுக் கொள்.

ஜெபம்:

ஆண்டவரே, பிறரைப் பற்றி இழிவாகப் பேசி, அவர்களைப் பற்றி புறங்கூறும் தீயகுணத்தை என்னிடமிருந்து நீக்கியருளும். ஆமென்.