காலைத் தியானம் – ஜூலை 10, 2022

லூக்கா 7: 40 – 50

இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது

                     அந்தப் பெண், தன் பாவங்களுக்காக அழுது, கண்ணீரால் கிறிஸ்துவின் காலை நனைத்து, அவர் பாதங்களைப் பிடித்துக் கொண்டாள். ஆகையால் அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. பாவம் உன்னை அழுத்தும் போது நீ என்ன செய்கிறாய்? முதலாவதாக உன் மனதைக் கல்லாக்கிவிடாதே. மேலும் பிற மனிதரையும் நாடிச் செல்ல வேண்டாம். மனிதரிடம் (தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தாலும்) மீட்பு கிடைக்காது. நீ நம் மீட்பரின் பாதத்தை நோக்கிதான் செல்லவேண்டும். இயேசுகிறிஸ்துவின் பாதங்களைப் பற்றிக் கொள். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு உன் பாவபாரம் உன்னை விட்டு நீங்கும்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் பாவத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். என் பாவங்களை மன்னித்து என் பாவ பாரத்தை நீக்கும். ஆமென்.