காலைத் தியானம் – ஜூலை 11, 2022

லூக்கா 8: 1 – 15

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்

                     வேத வசனங்களின் மூலமாக தேவன் நம்மோடு பேசுகிறார். வாழ்க்கையின் அனுபவங்கள் மூலமாக அவர் பேசிக்கொண்டேயிருக்கிறார். சிலசமயங்களில் துன்பங்களின் மூலமாகக் கூட ஆண்டவர் நம்மிடம் பேசுகிறார். ஆனால் அநேகருக்கு அவருடைய சத்தம் கேட்பதில்லை. கேட்கிறதற்குக் காதுள்ளவர்களுக்கு மட்டும்தான் ஆண்டவர் என்ன சொல்கிறார் என்பது புரிகிறது. இயேசுகிறிஸ்து சொன்ன நான்கு வகையான நிலங்களில் நீ எப்படிப்பட்ட நிலம்? பயிரை நெருக்கிப் போடும் நிலமென்றால், உலகப்பிரகாரமான காரியங்களைப் பற்றிய கவலை, பண ஆசை, சிற்றின்பங்களில் ஈடுபாடு, போன்ற முட்கள் உன் உள்ளத்தில் வளர்ந்துகொண்டேயிருக்கும். அவருடைய சத்தத்தைக் கேட்கிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, என் உள்ளமாகிய தோட்டத்தில் வளரும் களைகளைப் பிடுங்கி எடுத்து, என் உள்ளத்தைப் பண்படுத்தும். ஆமென்.