காலைத் தியானம் – ஜூலை 12, 2022

லூக்கா 8: 16 – 21

எனக்குத் தாயும், எனக்குச் சகோதரருமாய் இருக்கிறார்கள்

                     இயேசு தன் தாயுடனும் சகோதரருடனும் இருந்த உறவை முறித்துக் கொள்ளும்படியாக இந்த வார்த்தைகளைக் கூறவில்லை. தேவனுடைய வசனத்தைக் கேட்டு அதின்படி செய்கிறவர்களைத் தன் குடும்பத்தின் அங்கத்தினராக ஏற்றுக் கொள்வதையே இப்படிச் சொல்கிறார். தேவனுடைய வசனத்தைக் கேட்டால் மட்டும் போதாது. அந்த வசனங்களின் படி கீழ்ப்படிந்து செயல்படவும் வேண்டும். இயேசு தன் தாயை எவ்வளவு நேசித்தாரோ அந்த அளவுக்கு நம்மையும் நேசிக்கிறார். இயேசுவுடன் இந்த நெருக்கமான ஆவிக்குரிய உறவு உனக்கு உண்டா?

ஜெபம்:

ஆண்டவரே, என்னை உமது குடும்பத்தில் ஒருவனா(ளா)க ஏற்றுக் கொண்டதற்காக நன்றி. துதி, கனம், மகிமை அனைத்தும் உமக்கே உண்டாவதாக. ஆமென்.