காலைத் தியானம் – ஜூலை 13, 2022

லூக்கா 8: 22 – 29

உடனே . . . அமைதலுண்டாயிற்று

                     வாழ்க்கையில் கொந்தளிப்பு ஏற்படுகிற சமயங்களில் நம் கண்கள் இருண்டு விடுகின்றன. கொந்தளிப்பு அடக்கமுடியாத மாபெரும் பூதமாகக் காட்சியளிக்கிறது. கொந்தளிப்புகள் குடும்பத்தில் ஏற்படலாம் அல்லது திருச்சபையில் கூட ஏற்படலாம். ஆனால் அவைகளை அடக்கக்கூடியவர் நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்து. அவர் ஒரு வார்த்தை மட்டும் கூறினால் போதும். அமைதி ஏற்படும். ஆனால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஒன்று உண்டு. ஐயரே, ஐயரே என்று சீடர்கள் அவரிடம் சென்றது போல, நாமும் அவரிடம் ஓட வேண்டும். நீ கொந்தளிப்புகளைச் சந்திக்கும் நேரங்களில் உன் தேவனை நோக்கி ஜெபம் செய்.

ஜெபம்:

ஆண்டவரே, ஜெபத்தின் வல்லமையை உணர்ந்து கொள்ள எனக்குக் கிருபை தாரும். ஆமென்.