காலைத் தியானம் – ஜூலை 14, 2022

லூக்கா 8: 30 – 39

தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி

                     பிசாசுகள் நீங்கின மனிதன் இயேசுவோடு கூட இருக்க ஆசைப்பட்டான். ஆகையால் இயேசுவிடம் உத்தரவு கேட்டான். உத்தரவு கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. இயேசுவிடமிருந்து பெற்ற நன்மைகளைத் தன் குடும்பத்தினரிடம் போய் அறிவிக்க வேண்டியதே அந்த வேலை. பிசாசுகள் நீங்கின மனிதன் அந்த வேலையைச் செய்தான். நீ இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களையும் அற்புதங்களையும் உன் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறியது உண்டா? இல்லையென்றால் இப்பொழுதே அவற்றை சொல்ல ஆரம்பிக்க வேண்டும். அது மற்றவர்களை இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்தும். விசுவாசத்தை உறுதிப்படுத்தும்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் உம்மிடம் பெற்ற நன்மைகள் ஏராளம். நான் பயப்படாமலும், வெட்கப்படாமலும் அவற்றை மற்றவர்களிடம் சொல்ல எனக்குக் கிருபை தாரும். ஆமென்.