காலைத் தியானம் – ஜூலை 15, 2022

லூக்கா 8: 40 – 48

ஒருவர் என்னைத் தொட்டதுண்டு

                     எத்தனையோ பேர் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகையால் அநேகர் அவரைத் தொட்டுக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். ஆனால் அந்தப் பெண் தொட்டதில் ஒரு வித்தியாசம் இருந்தது. அவள் விசுவாசத்தோடு இயேசுவைத் தொட்டாள். தான் சுகமடையவேண்டும் என்கிற ஆத்திரத்தோடு அவரைத் தொட்டாள். அவரிடமிருந்து வல்லமையை எடுத்துக் கொண்டாள். அந்தப் பெண் தொட்டது casual touch அல்ல. நீ இயேசுவிடமிருந்து வல்லமையைப் பெறும்படியாக அவரைத் தொட்டுக் கொண்டிருக்கிறாயா அல்லது உன் உறவு வெறும் casual touch தானா? இரவும் பகலும் ஜெபத்தின் மூலம் அவரைத் தொட்டுக் கொண்டேயிருக்கவேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, இரவும் பகலும் உம்மைத் தொட்டுக்கொண்டேயிருப்பேன். உமது வல்லமையை என்னில் விளங்கப்பண்ணும். ஆமென்.