காலைத் தியானம் – ஜூலை 16, 2022

லூக்கா 8: 49 – 56

அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்

                     மரித்துப்போன பிள்ளைக்கு இயேசு உயிர் கொடுத்தார். ஆனால் அந்தப் பிள்ளைக்கு ஆகாரம் கொடுத்து அவளைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு கொடுக்கப்படுகிறது. பிள்ளைகளைப் பெற்றோருக்குக் கொடுப்பது ஆண்டவர்.  அவர்களை வளர்க்க வேண்டியது பெற்றோர். உங்கள் பிள்ளைகளின் சரீர வளர்ச்சிக்காக தவறாமல் ஆகாரம் கொடுத்து வருகிறீர்கள். ஆத்தும வளர்ச்சிக்கான ஆகாரம் கொடுத்து வருகிறீர்களா? வேத வசனங்களையும், பாடல்களையும் சொல்லிக் கொடுங்கள். ஓய்வுநாள் பள்ளிக்கு ஒழுங்காக அனுப்பி வையுங்கள். உங்கள் பிள்ளைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

ஜெபம்:

ஆண்டவரே, என் பிள்ளைகளின் ஆத்தும வளர்ச்சியில் அக்கறை கொண்டு, அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்கு எனக்கு ஞானத்தைத் தாரும்.