லூக்கா 9: 1 – 9
அவர்களுக்கு சாட்சியாக
கால்களில் படிந்த தூசி சாட்சி சொல்லும் என்கிறார் இயேசு. அந்த மக்கள் செய்த தவறு என்ன? இயேசுவின் சீடர்களையும் அவர்களின் போதனைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. கால்களில் படிந்த தூசியை உதறிப் போடுவது, யூத கலாச்சாரத்தின் ஒரு பழக்கம். யூதரல்லாத மக்கள் வாழும் பகுதியைக் கடந்து செல்லும்போது, எனக்கும் இந்த யூதரல்லாத வேறு இன மக்களின் பழக்க வழக்கங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை வெளிப்படுத்த செய்துவந்த செயல்தான் கால்களில் படிந்த தூசியை உதறிப் போடுவது. இயேசு கிறிஸ்துவின் சீடர்களையும் அவர்களின் போதனைகளையும் ஏற்றுக்கொள்ளாத மக்களுடன் அவர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதற்கு உதறிப் போட்ட தூசி சாட்சி சொல்லுமாம்! தேவ ஊழியர்களையும் அவர்கள் மூலமாக தேவன் கொடுக்கும் செய்திகளையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகளை அலட்சியம் செய்யாமல் ஏற்றுக்கொள்ளவும், கிருபையாய் நீர் தந்துள்ள இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.