காலைத் தியானம் – ஜூலை 18, 2022

லூக்கா 9: 10 – 17

நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்

                     இயேசுவுக்கு சீடனாய் இருந்தால் நமக்கு சில கடமைகளும் உண்டு. மற்றவர்களுக்கு உணவு கொடுப்பது அப்படிப்பட்ட ஒரு கடமை. பெற்றுக் கொண்டேயிருப்பது மட்டும் நம் வேலை இல்லை. நாம் கொடுக்கவும் வேண்டும். உன்னிடத்தில் இருக்கும் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தால், அவர் அதை 5000 பேருக்கு போதுமான ஆகாரமாய்ப் பெருக்கித் தருவார். உன் தாலந்துகளை (எவ்வளவு சிறியது என்று நீ நினைத்தாலும்) ஆண்டவரின் பாதத்தில் அர்ப்பணித்து விடு. அது எத்தனை பேருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படி அதை பெருக்கித் தருகிறார் என்பதைக் கண்டு பிரமிப்பு அடைவாய்.

ஜெபம்:

ஆண்டவரே, என்னிடமுள்ள தாலந்துகள் அனைத்தும் நீர் கொடுத்தவை. அவைகளை உம்முடைய பணிக்காக உபயோகிப்பதைக் காட்டிலும் மேலான பாக்கியம் எனக்கு வேறொன்றுமில்லை. ஆசீர்வதித்து உபயோகப்படுத்தும். ஆமென்.