லூக்கா 9: 28 – 36
ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையை . . . . கண்டார்கள்
நம்முடைய மனம் விழிப்படைய வேண்டும். அப்பொழுதுதான் இயேசுவின் மகிமையைக் காண முடியும். தூங்கிக் கொண்டிருப்பவன் எதையும் தன் கண்களால் காண முடியாது. உன் மனம் விழிப்படையவும், விழிப்படைந்த நிலையிலேயே இருக்கவும் நீ என்ன செய்கிறாய்? தனி ஜெபம், வேதத்தை ஆராய்வது, ஆலயம் செல்வது, ஜெபக் கூட்டங்களில் பங்கு பெறுவது போன்றவைகள் உன் மனம் விழிப்படைய உதவி செய்பவைகளே. இவைகளை அசட்டை செய்ய வேண்டாம்.
ஜெபம்:
ஆண்டவரே, பிரகாசமான மனக்கண்களை எனக்குத் தாரும். ஆமென்.