காலைத் தியானம் – ஜூலை 21, 2022

லூக்கா 9: 37 – 45

அவர்கள் மலையிலிருந்து இறங்கிய போது   

                     மறுரூப மலையின் அனுபவம் இன்பமானது. பேதுருவுக்கு அங்கேயே இருந்து விட வேண்டும் என்று ஆசை. மலையின் மேலே கூடாரம் போட்டு ஆண்டவருடைய பிரசன்னத்திலேயே இருந்துவிட்டால் ஆனந்தம்தான். ஆனால் மலையிலிருந்து இறங்கி வரவேண்டிய அவசியம் இருந்தது. அவசர வேலை காத்துக் கொண்டிருந்தது. நாமும் பக்திமான்களாக இருக்கலாம். இயேசுவோடு நெருங்கி ஜீவித்து வருகிறவர்களாக இருக்கலாம். ஆனால் ஆண்டவர் நம்மை இந்த உலகத்தில் வைத்தது, நம்மைச் சுற்றி ஒரு கூடாரம் போட்டுக் கொள்வதற்காக இல்லை. பசியுள்ளவர்களின் பசியைப் போக்க வேண்டும். தாகமாயிருப்பவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். பிசாசின் பிடிகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க வேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் சகோதரருடைய சரீர, ஆத்தும தேவைகளுக்காக உழைக்கும்படி எனக்குப் பெலன் தாரும். ஆமென்.