லூக்கா 9: 46 – 56
தங்களில் எவன் பெரியவனாயிருப்பான்
பெரியவனாயிருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. அது மனித இயல்பு. பத்து பேரை வைத்து வேலை வாங்குகிறவன் முதலாளி என்று அழைக்கப்படுகிறான். அவன் பெரிய மனிதன். ஒரு தொழிற்சாலை வைத்து ஆயிரம் பேரிடம் வேலை வாங்குகிறவன் அதைவிடப் பெரிய மனிதன். இது உலக முறை. பரலோக முறை முற்றிலும் வேறுபட்டது. எல்லாருக்கும் ஊழியம் செய்கிறவனே பரலோக முறைப்படி பெரியவன். பல கிறிஸ்தவ நிறுவனங்களின் அல்லது ஆலயங்களின் தலைவர்கள் கூட இந்த பரலோக முறையைக் கைக்கொள்வதில்லை. வருத்தப்பட வேண்டிய விஷயம். நாம் இயேசுவையே பின்பற்றுவோம்.
ஜெபம்:
ஆண்டவரே, நான் உம்மையே பின்பற்றி, மற்றவர்களுக்கு சேவை செய்து, பரலோக முறைப்படி பெரியவனாயிருக்க விரும்புகிறேன். எனக்கு உதவி செய்யும். ஆமென்.