காலைத் தியானம் – ஜூலை 23, 2022

லூக்கா 9: 57 – 62

கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டு பார்க்கிறவன்  

                     அநேக சமயங்களில் நல்ல தீர்மானங்கள் எடுக்கிறோம். கிறிஸ்துவுக்காக அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று தீர்மானிக்கிறோம். ஆனால் சில நாட்களில் அல்லது வாரங்களில் உலகம் நம்மைத் தன் பக்கமாக இழுத்து விடுகிறது. சாத்தானுக்கு “இவ்வுலகின் இளவரசன்” என்று ஒரு பெயர் உண்டு. அவன் இயேசுவையே உயரமான மலையின்மேல் நிறுத்தி, உலகத்தைக் காட்டி, இழுக்க முயன்றானே! கலப்பையின் மேல் கை வைத்த நீ, உனக்கு முன்னால் செல்லும் உன் ஆண்டவரை நோக்கிப் பார். பின் திரும்பி உலகத்தைப் பார்க்கும்படி இழுக்கும் சாத்தானின் சத்தத்திற்குச் செவி சாய்க்காதே. “இயேசு என் முன்னே, உலகம் என் பின்னே, பின் நோக்கேன் நான், பின் நோக்கேன் நான்” என்ற பாடலைப் பாடிக் கொண்டே வெற்றி நடை போடுவோம்.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய ராஜ்யத்தில் சேவை செய்ய ஆசைப்படுகிறேன். சார்தான் என்னைப் பின் நோக்கிப் பார்க்க இழுக்கும்போது, என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.