காலைத் தியானம் – ஜூலை 24, 2022

லூக்கா 10: 1 – 12

அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்  

                     இயேசு பூமியில் மனிதனாய் வாழ்ந்த காலத்தில் அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். சில சமயங்களில் நாம் 12 சீடர்கள் மட்டுமே இருந்தார்கள் என்று நினைக்கிறோம். அது தவறு. இயேசு தம் சீடர்களில் 12 பேரை அப்போஸ்தலராகத் தெரிந்து எடுத்தார் (லூக்கா 6:13).  இன்று வாசித்த வேத பகுதியில், இயேசு தம் சீடர்களில் 70 பேரை, ஒரு பணிக்காக நியமிக்கிறார். அநேக சீடர்கள் இருந்தபோதிலும், “அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்” என்று சொன்னார். இன்றும் அதையே சொல்கிறார். வாலிபர்கள் மத்தியில் ஊழியம், சிறுவர் மத்தியில் ஊழியம், சுகவீனரைச் சந்திப்பது, வயோதிபரைச் சந்திப்பது, கிறிஸ்துவைப் பற்றி புத்தகங்கள் எழுதுவது, சுவிசேஷத்தை அறிவிப்பது போன்று கிறிஸ்துவுக்காக செய்யப்படவேண்டிய ஊழியங்கள் ஏராளம் உண்டு. நீ ஈடுபட்டுள்ள ஊழியம் எது? உன் திறமைகளையும் தாலந்துகளையும் இயேசுவுக்கென்று அர்ப்பணிப்பது மிகவும் அவசியம். அதைவிட முக்கியமானது அவருடைய வல்லமையால் நிரப்பப்படும்படி காத்திருப்பது. தேவ வல்லமையால் நிறைந்து அவருக்கு ஊழியம் செய்யும் போது, உன் ஊழியம் ஆசீர்வதிக்கப்படும்.

ஜெபம்:

ஆண்டவரே, இதோ அடியேன் இருக்கிறேன். உமது வல்லமையால் நிரப்பி என்னை உபயோகித்தருளும். ஆமென்.