லூக்கா 10: 13 – 22
உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்
ஆட்டுக்குட்டிகள் ஓநாய்களுக்குள்ளே அனுப்பப்படுகிறது போல அனுப்பப்பட்ட எழுபது சீடர்களும் திரும்பவந்து சந்தோஷமான ரிப்போர்ட் (Report) கொடுக்கிறார்கள். எந்த வேலைக்காக அனுப்பப்பட்டார்களோ, அந்த வேலையைச் செய்து முடித்துவிட்டு வந்ததால், ஆண்டவர் இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஆண்டவர் உனக்குக் கொடுத்திருக்கும் வேலை எது? உன் அழைப்பை அறிந்து, கலப்பையில் கை வைத்து விட்டாயா? இரண்டாவதாக அந்த வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறாயா? உன் பெயரும் பரலோகத்தில் எழுதப்படவேண்டும்.
ஜெபம்:
ஆண்டவரே, நான் ஈடுபட்டிருக்கும் உம்முடைய ஊழியத்தில், உண்மையுடனும் உத்தமத்துடனும் கடைசிவரை வேலைசெய்யக் கிருபை தாரும். ஆமென்.