காலைத் தியானம் – ஜூலை 26, 2022

லூக்கா 10: 23 – 28

அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய்  

                    அறிவு இருப்பது நல்லது. ஆனால் அறிவு மட்டும் போதாது. அறிவுத்திறன் உன்னை இரட்சிக்காது. இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும் என்று அறிந்திருப்பதினால் மட்டும் இரட்சிப்பு கிடைக்காது. நியாயசாஸ்திரிக்கு அறிவு இருந்தது. ஆனால் அறிந்திருந்தபடி அவன் செயல்படவில்லை. ஆகையால்தான் இயேசு அவனைப் பார்த்து அப்படியே செய் என்றார். நமக்குள் நன்மை எது, தீமை எது என்று பகுத்தறியத்தக்க அறிவு உண்டு. ஆனால் அந்த அறிவின்படி நன்மையான வழிகளிலேயே எப்பொழுதும் நடக்க முடிகிறதில்லை.

ஜெபம்:

ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவேன். ஆனாலும் என் சுயபெலத்தினால் அதைச் செய்ய முடியாது. நீரே எனக்குப் பெலன் தாரும். ஆமென்.