லூக்கா 10: 29 – 37
பக்கமாய் விலகிப் போனான்
நாம் அடிக்கடி வாசித்துத் தெரிந்து கொண்ட உவமைதான். இந்த உவமை நம் வாழ்க்கையையும் பிரதிபலிப்பதாகத்தானே இருக்கிறது! நாமும் பக்கமாய் விலகிப் போகிறவர்கள் தானே? வேலை அதிகமாயிருக்கிறது, வயோதிபரையும் தனிமையில் வாடுபவர்களையும் சந்திக்க நேரமில்லை. வியாதியஸ்தர்களைப் போய் பார்க்க நேரமில்லை. ஏழைகளுக்கு உதவி செய்ய ஆசை. ஆனால் நேரம் இல்லை. உன் தொழில் அல்லது உத்தியோகம், வாழ்க்கையில் நீ செய்ய வேண்டியவைகளைத் தடைசெய்யுமானால், நீ உட்கார்ந்து எதற்கு எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும் என்று உன்னையே பரிசீலித்துப் பார்க்கவேண்டும். Set your priorities right.
ஜெபம்:
ஆண்டவரே, இந்த உலகம் என்னோடு ஒட்டிக் கொள்கிறது. என்றாலும் உம்முடைய ராஜ்யத்தின் காரியங்களையே நான் நாடுகிறேன். என்னை வழிநடத்தும். ஆமென்.