காலைத் தியானம் – ஜூலை 28, 2022

லூக்கா 10: 38 – 42

தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு

                    மார்த்தாள் இயேசுவை அதிகமாக நேசித்தாள். அவள் செய்த வேலைகள் மிகவும் அவசியமானவைதான். வேலை செய்யும்போது சகோதரிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயல்பு தானே? அப்படியென்றால் இயேசு ஏன் மார்த்தாளைக் கடிந்து கொண்டார்? மார்த்தாள் இயேசுவுக்காக வேலை செய்த போதிலும் இயேசுவோடு நேரத்தை செலவிடவில்லை. நாமும் இயேசுவுக்காக காலை முதல் இரவு வரை ஓடலாம், உழைக்கலாம். ஆனால் இயேசுவோடு நேரம் செலவழிக்கிறோமா? மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்று இயேசு கூறுகிறார். பணம் தேவைதான். ஆனால் அது நாம் பூமியில் வாழும் நாட்களுக்கு மட்டுமே தேவை. அது நம்மை விட்டு எடுபடும் பங்கு. நம்மை விட்டு எடுபடாத பங்கைச் சேர்ப்பதில் ஈடுபட்டிருக்கிறோமா? நம்மை விட்டு எடுபடாதவைகள் சில கலாத்தியர் 5: 22, 23 இல் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஜெபம்:

ஆண்டவரே, நான் உமக்காக மட்டுமல்ல, உம்மோடும் என் நேரத்தை உபயோகிக்கக் கிருபை தாரும். ஆமென்.