காலைத் தியானம் – ஜூலை 29, 2022

லூக்கா 11: 1 – 13

தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்

                    கிறிஸ்துவை அறியாதவர்கள் “விதி” என்று சொல்வதும், கிறிஸ்துவை அறிந்தவர்கள் “தேவனுடைய சித்தம்” என்று சொல்வதும் ஒன்றல்ல. நடப்பதெல்லாம் தேவனுடைய சித்தம் அல்ல. நம்முடைய சுய சித்தம் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாகச் செயல்படக்கூடும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் நமக்கு ஒரு பங்கு உண்டு. நாம் தட்டவேண்டும். தட்டினால் திறக்கப்படும். நீ கேட்பது தேவனுடைய சித்தத்திற்கு விரோதமானது அல்ல என்றால் கேட்டுக்கொண்டேயிரு.  திறக்கும் வரை தட்டிக்கொண்டேயிரு. ”வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது” (8வது வசனம்) என்ற வார்த்தைகளைக் கவனிப்போமாக.  உன் ஜெபம் எப்படிப்பட்டது?

ஜெபம்:

ஆண்டவரே, நான் கேட்பதற்கு முன்னதாகவே என் தேவைகள் மற்றும் என் மனதின் பாரங்கள் அனைத்தையும் நீர் அறிவீர். ஆனாலும் நீர் சொல்லிக் கொடுத்தபடியே நான் கேட்கிறேன். என் ஜெபத்திற்குப் பதில் தாரும். ஆமென்.