காலைத் தியானம் – ஆகஸ்ட் 01, 2022

லூக்கா 11: 37 – 44

அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாய் இருக்கும்

                    வெளிப்புறங்களைச் சுத்தமாக வைக்க அநேக முயற்சிகள் எடுக்கிறோம்.  பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். உடல் சுத்தமாக இருக்க வேண்டும். உடைகள் சுத்தமாக இருக்க வேண்டும். நல்லது தான். ஆனால் உள்ளம் எப்படி இருக்கிறது? வெளிப்புறத்தைப் போன்று உன் உள் பக்கமும் சுத்தமாயிருக்கிறதா? தேவனுடைய அன்பு உன் உள்ளத்தில் இருந்தால் சகலமும் சுத்தமாயிருக்கும். உன்னைப்போல பிறரையும் நேசித்தால்தான் உன் பொருட்களைப் பிறருக்குக் கொடுக்க முடியும். அன்பு உன் உள்ளத்திற்குள் வந்து விட்டால் உன் உள்ளம் கழுவப்பட்டு சுத்தமாய் இருக்கும்.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய அன்பை என் உள்ளத்தில் ஊற்றியருளும். ஆமென்.