காலைத் தியானம் – ஆகஸ்ட் 02, 2022

லூக்கா 11: 45 – 54

கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்             

                    தீர்க்கதரிசிகள் மக்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களைக் கண்டித்தார்கள். அதற்காக மக்கள் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தார்கள். அந்த மக்களின் பிள்ளைகளோ, கொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பெயரில் கல்லறைகளைக் கட்டுகிறார்களாம்! ஆனால் இந்த மரியாதை மரித்துப்போன தீர்க்கதரிசிகளுக்கு மட்டும் தான். உயிரோடு இருக்கும் தீர்க்கதரிசிகளை இவர்களும் கொலை செய்துகொண்டுதான் இருந்தார்கள். அக்காலத்து மாட்டின் லூதரை பெருமைப்படுத்தி, இக்காலத்து மாட்டின் லூதர்களைச் சிறுமைப்படுத்தும் பழக்கம் நம் திருச்சபைகளிலும் இன்று உண்டோ? வேதாகமத்திற்கு முரண்பாடான பழக்கங்களைச் சுட்டிக்காட்டும் தேவ ஊழியர்களைச் சிறுமைப்படுத்த வேண்டாம்.

ஜெபம்:

ஆண்டவரே, சத்தியத்தை தைரியமாகப் போதிக்கும் உம்முடைய ஊழியக்காரரையும் அவர்கள் போதனைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை எனக்குத் தாரும்.ஆமென்.