காலைத் தியானம் – ஆகஸ்ட் 03, 2022

லூக்கா 12: 1 – 10

நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்  

                    இன்று நாம் யாருக்கெல்லாம் அல்லது எதற்கெல்லாம் பயப்படுகிறோம் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். மேலதிகாரிகளைக் கண்டால் பயம். தீவிரவாதிகளுக்குப் பயம். சமுதாயம் என்ன சொல்லிவிடுமோ என்று பயம். வியாதியைக் குறித்து பயம். உன்னுடைய பயம் உனக்குத் தெரியும். தேவனுக்குப் பயப்படுகிறவர்கள் வேறே எந்த மனிதனுக்கும் பயப்படத் தேவையில்லை. ஆனால் நாம் எல்லாருமே தீமையில் ஈடுபடுவதற்குப் பயப்படவேண்டும். தீமையைக் கண்டால் பாம்பைக் கண்டவன் கலங்கி, விலகி ஓடுகிறது போல, விலகி ஓட வேண்டும். அப்படி விலகி விட்டால் நரகத்திற்குப் பயப்பட வேண்டியதில்லை. தீமையோடும் தீமையான சிந்தனைகளோடும் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம். நல்ல சிந்தனைகள் உன்னுடைய இணை பிரியா நண்பர்களாயிருக்கட்டும். தீமையான சிந்தனை விஷப்பாம்பைப் போல கொடியது என்பதை மறந்து விடாதே.

ஜெபம்:

ஆண்டவரே, தீமையான எண்ணங்களை என் உள்ளத்திலிருந்து நீக்கி, பரிசுத்தமான இருதயத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.