காலைத் தியானம் – ஆகஸ்ட் 04, 2022

லூக்கா 12: 11 – 21

தேவனிடத்தில் ஐசுவரியவான்

                    இந்த உவமையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பணக்காரனுக்குப் ”பணக்கார முட்டாள்” (The Rich Fool) என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதில் இவனுடைய முட்டாள்தனம் காணப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். இவன் தன்னைப் பற்றியே நினைத்தவனாக வாழ்ந்திருந்தான். மற்றவர்களைப் பற்றி நினைக்கவே இல்லை. மற்றவர்களைப் பற்றி நினைக்காதவன் எப்படி ‘உன்னைப்போல் பிறனையும் நேசி’ என்ற கட்டளைக்குக் கீழ்ப்படியமுடியும்? இரண்டாவதாக, இவன் இவ்வுலக வாழ்க்கையையே நினைத்துக் கொண்டிருந்தான். இவ்வுலக வாழ்க்கைக்கு மேலாக இருக்கும் பரலோக வாழ்க்கையைப் பற்றிய எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் வாழ்ந்திருந்தான். இவ்வுலகப் பற்றும், இவ்வுலகப் பொருளும் உன் ஆத்துமாவை மயக்கிவிடும். இந்த மயக்கத்திற்கு இடம் கொடுத்து விடாதே.

ஜெபம்:

ஆண்டவரே, இவ்வுலகில் வாழும் இந்த நாட்களில், பணமும் சொத்துக்களும் சேர்ப்பதிலேயே என் வாழ்க்கையை வீணாக்கி விடாமல், பிறருக்காக உருகும் கருணை நிறைந்த உள்ளத்தை எனக்குத் தாரும். ஆமென்.