காலைத் தியானம் – ஆகஸ்ட் 05, 2022

லூக்கா 12: 22 – 31

உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்

                    நேற்று தியானித்த பகுதியில் பணவசதி அதிகமாக இருப்பதால், பணம் அல்லது செல்வத்தையே நினைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இயேசு சொல்லும் போதனையைப் பற்றி பார்த்தோம். இன்று போதுமான பணவசதி இல்லையே என்று நினைத்து, வருந்தி, தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லாமல், இரவும் பகலும் பணத்தின் பின் செல்லும் மக்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம். இவ்வுலகத்தில் வாழ்வதற்கு இவ்வுலகப் பொருட்கள் தேவை என்பதை உன் பரம தகப்பன் அறிந்திருக்கிறார். உனக்கு எவ்வளவு தேவை என்பதும் அவருக்குத் தெரியும். அது போதும். நீ தேவனுடைய ராஜ்யத்தைத் தேடு. உன் தேவைகளை அறிந்திருக்கிற உன் ஆண்டவர் உனக்குத் தேவையானவைகளைத் தருவார். உன் வாழ்க்கையிலேயே அதற்கு அநேக அனுபவங்கள் உண்டே! இம்மட்டும் உன்னைக் காத்து வழி நடத்திய கர்த்தர் இன்னமும் உன்னை வழி நடத்துவார்.

ஜெபம்:

ஆண்டவரே, என் தேவைகளையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். இம்மட்டும் என்னை வழி நடத்தியது போல இன்னமும் வழி நடத்தும். ஆமென்.