காலைத் தியானம் – ஆகஸ்ட் 06, 2022

லூக்கா 12: 32 – 40

எஜமான் வரும்போது விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்

                    பல அலுவலகங்களில், மேல் அதிகாரிகளின் முன்னிலையில் மட்டும் நன்றாக வேலைசெய்யும் அல்லது வேலைசெய்வது போல நடிக்கும் ஊழியர்களைப் பார்த்திருக்கிறேன். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்ட ஏமாற்றும் வேலை எடுபடாது. அவர் எப்போது வருவார் என்பது நமக்குத் தெரியாது. மேலும் நம்முடைய பூலோக வாழ்வும் எந்த நேரத்திலும் முடிவடையக்கூடும். உன் ஆண்டவரை எந்த நேரத்தில் சந்தித்தாலும் அவர் உன்னை உண்மையுள்ள ஊழியக்காரனாகக் கண்டு மகிழ வேண்டும். அதற்கு நீ தயாராக இருக்கிறாயா? தேவனோடு ஒப்புரவாகிறதில் அல்லது உன் சகோதரர் சகோதரிகள் உட்பட மற்ற மனிதரோடு ஒப்புரவாகிறதில் ஏதாவது குறை வைத்திருக்கிறாயா? குறை வைத்திருந்தால் உடனேயே அவர்களோடு ஒப்புரவாகிவிடு. எந்த வேலையையும் தள்ளிப் போடாதே.

ஜெபம்:

ஆண்டவரே, உமது வருகையோ அல்லது என்னுடைய அழைப்போ – எது முதலில் நடந்தாலும் அதற்காக நான் தயாராக இருக்கும்படி உதவி செய்யும். என்னிடத்தில் எந்தவித குறையும் இல்லாமல் காத்துக் கொள்ளும். ஆமென்.