காலைத் தியானம் – ஆகஸ்ட் 08, 2022

லூக்கா 12: 51 – 59

வழியில்தானே . . . பிரயாசப்படு  

                    இன்று அலுவலகத்தில் செய்து முடிக்கவேண்டிய வேலைகள் ஐந்து இருந்தால், ஒன்று அல்லது இரண்டை செய்துவிட்டு மற்றவைகளை நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்துவிடும் மனப்பான்மை நம்மில் அநேகருக்கு இருக்கின்றது. அதே மனப்பான்மை ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பன்மடங்கு அதிகமாய்க் காணப்படுகிறது. உன்னைத் திசை திருப்புவது எது அல்லது எவை என்பதை யோசித்துப் பார். இப்பூமியில் நாம் இருக்கும் நாட்கள் தான் ”வழியில் இருக்கும் காலம்”. இந்த காலத்திலே நீ சண்டை போட்டுக் கொண்டிருக்கும் உன் உற்றாரோடும் உறவினரோடும் உன் சண்டையைத் தீர்த்துக் கொள். உன் ஆண்டவரை விட்டு விலகி, தூரமாய் சென்று கொண்டிருந்தால், அவரோடு வந்து சேர்ந்துகொள். இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் செய்ய முடியாத காரியங்கள் உண்டு என்பதை ஞாபகப்படுத்திக் கொள். இன்று செய்ய வேண்டியதை இன்றே செய். நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைக்காதே.

ஜெபம்:

ஆண்டவரே, என் உற்றாரோடும், உறவினரோடும் ஒப்புரவாவதற்குத் தடையாக இருக்கும் என் பெருமை, பொறாமை, தன்னலம் ஆகியவற்றை உடைத்தருளும். ஆமென்.