காலைத் தியானம் – ஆகஸ்ட் 09, 2022

லூக்கா 13: 1 – 9

கனி கொடுத்தால் சரி, கொடாவிட்டால் . . .  

                    நாம் வேலை செய்யுமிடத்தில் நம்முடைய மேற்பார்வையாளருக்கு நம்மிடமிருந்து சில எதிர்பார்ப்புகள் உண்டு. அவற்றை வருடத் துவக்கத்தில் ஏற்றுக்கொள்கிறோம். ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறே வழியில்லை என்ற நிலை கூட இருக்கலாம். வருடக் கடைசியில் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் சம்பள உயர்வு கிடைக்கும். அல்லது எச்சரிப்பு கடிதம் கிடைக்கும்! தொடர்ந்து கடமையில் தவறினால் வேலை போய்விடும். நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் செயலற்ற நிலைக்கும் பிரதிபலன் உண்டு. உன் ஆண்டவர் உன்னிடம் விரும்பி எதிர்பார்க்கும் கனி உண்டு. அந்தக் கனியைக் கொடுத்து வருகிறாயா? உன் ஆண்டவருடைய எதிர்பார்ப்பை அறிந்து அதை நிறைவேற்றும்படி வாழ ஆரம்பித்தால், உன் வாழ்க்கைக்கு ஒரு புதிய நோக்கமும் இலக்கும் கிடைக்கும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் வாழ்க்கையில் அநேக ஆண்டுகளை வீணடித்து விட்டேன். மீதியிருக்கும் நாட்களில் கனி தரும் மரமாக வாழ கிருபை தாரும். ஆமென்.